வவுனியாவில் நேற்று மாலை இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட இரு சிறுமிகள், அலரிவிதையை உட்கொண்ட நிலையில் நேற்றிரவு மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(Two Girls Kidnapped vavuniya,Tamilnews,Srilanka Tamilnews)
இந்த சம்பவத்தால் குறித்தப் பகுதியில் நேற்று பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15, 16 வயதுகளையுடைய சிறுமிகள் இருவர் நேற்று பாடசாலையை விட்டு வீடு திரும்பிய நிலையில் காணாமல்போயிருந்தனர்.
பாடசாலை முடிந்து வீடு திரும்பிய பின்னர், பாடப்புத்தகம் வாங்குவதற்காக சிறுமிகள் இருவரும் சைக்கிளில் சென்றிருந்த நிலையிலேயே காணாமல் போயிருந்தனர்.
முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் அவர்களை கட்டாயப்படுத்தி சாந்தபுரம் பகுதிக்கு அழைத்து சென்று வவுனியா, சாந்தசோலை வீதியில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வைத்து கத்திமுனையில் துன்புறுத்தியுள்ளனர்.
அதன்பின்னர் பலவந்தமாக சிறுமிகளுக்கு அலரி விதையை உட்கொள்ள கொடுத்துள்ளனர்.
சிறுமிகளை காணவில்லையென உறவினர்கள் தேடிய நிலையில், சம்பவ இடத்திலிருந்து நேற்றிரவு 9 மணியளவில் தப்பி வந்த சிறுமிகள் நடந்தவற்றை உறவினர்களிடம் கூறியுள்ளனர்.
உடனடியாக சிறுமிகளை வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த வீட்டை நேற்று இரவு பூந்தோட்டம் இளைஞர்கள் முற்றுகையிட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரு சிறுமிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து சாப்பாட்டு பொதி, தண்ணீர் போத்தல், ஆண் ஒருவரின் பாதணி என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:Two Girls Kidnapped vavuniya,Two Girls Kidnapped vavuniya,Two Girls Kidnapped vavuniya