trust vote taking place Karnataka legislative assembly Assembly elections
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
முன்னதாக சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. அந்தப் பதவியை கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நீண்ட குழப்பத்துக்குப் பிறகு ம.ஜ.த. மாநிலத் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் கால அவகாசம் வழங்கினார்.
இந்நிலையில், குமாரசாமி இன்று கர்நாடக சட்டப்பேரவையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார்.
இதற்காக பேரவையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அவை கூடியதும் சட்டப்பேரவைத் தலைவர் தேர்தல் நடைபெறும்.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். பெரும்பான்மைக்கு 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதில் குமாரசாமிக்கு 78 காங்கிரஸ் உறுப்பினர்கள், 36 ம.ஜ.த. உறுப்பினர்கள், 1 பகுஜன் சமாஜ் உறுப்பினர் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.க.வுக்கு 104 உறுப்பினர்களின் ஆதரவுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு பெங்களூர் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ், ம.ஜ.த. எம்.எல்.ஏ.க்கள் சொந்த ஊருக்குத் திரும்புவார்கள் என தெரிகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் இன்று அவையில் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சீனிவாசப்பூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ்குமாரும், பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ராஜாஜி நகர் தொகுதி எம்.எல்.ஏ. சுரேஷ் குமாரும் நேற்று சட்டப்பேரவை செயலாளர் மூர்த்தியிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
எனினும், காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ரமேஷ் குமாருக்கு கூடுதல் வாக்குகள் இருப்பதால், அவர் சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
trust vote taking place Karnataka legislative assembly Assembly elections
More Tamil News
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது!
- ராகுல் – சோனியாவை சந்தித்த கமல்ஹாசன்!
- இணையதள சேவை முடக்கம் : நீதிமன்றத்தில் முறையீடு!
Tamil News Group websites :