(Today horoscope 30-05-2018 )
இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 16ம் தேதி, ரம்ஜான் 14ம் தேதி,
30.5.18 புதன்கிழமை, தேய்பிறை, பிரதமை திதி இரவு 9:44 வரை;
அதன் பின் துவிதியை திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 3:30 வரை;
அதன் பின் மூலம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.
* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : கார்த்திகை
பொது : சிவன் வழிபாடு, கரிநாள்.
மேஷ ராசி நேயர்களே !
முக்கியப்பணி நிறைவேற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். அரசுவகையில் நன்மை உண்டாகும்.
ரிஷப ராசி நேயர்களே !
திறமையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். உறவினர்களிடமிருந்து சுபசெய்தி வந்து சேரும்.
மிதுனம் ராசி நேயர்களே !
உங்களின் செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய விடாமுயற்சி தேவை. லாபம் சுமார். பெண்களுக்கு செலவுக்கான பணத்தேவை அதிகரிக்கும். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
கடக ராசி நேயர்களே !
மற்றவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உயரும். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற வாய்ப்பு உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
சிம்ம ராசி நேயர்களே !
சமயோசிதமாக செயல்பட்டு வளர்ச்சியடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
கன்னி ராசி நேயர்களே !
குடும்ப சிரமம் பற்றி பிறரிடம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேற்றுவது நல்லது. சுமாரான வருமானம் கிடைக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உண்டாகும். நண்பரால் உதவி உண்டு.
துலாம் ராசி நேயர்களே !
மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் பிள்ளைகளால் சிரமத்திற்கு ஆளாகலாம். அலைச்சலால் உடல் அசதி ஏற்படலாம்.
விருச்சிகம் ராசி நேயர்களே !
குடும்பத்தினரின் ஆலோசனையை ஏற்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு பாராட்டு வெகுமதி கிடைக்கும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.
தனுசு ராசி நேயர்களே !
நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். ஆரோக்கியம் மேம்படும்.
மகர ராசி நேயர்களே !
நண்பர்களால் பிரச்னைக்கு ஆளாகலாம். தொழில் வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் நகை, பணம் இரவல் கொடுக்க வாங்க வேண்டாம். பிள்ளைகளின் செயல்பாடு ஆறுதல் அளிக்கும்
கும்பம் ராசி நேயர்களே !
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களுடன் நட்புடன் பழகுவர். உடல்நலனில் கவனம் தேவை. நண்பரால் உதவி கிடைக்கும்.
மீனம் ராசி நேயர்களே !
எதிர்பாராத வகையில் திடீர் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க திணறுவர். உடல்நலனில் அக்கறை கொள்வது நல்லது.
எமது sothidam.com வழங்கும் பிற செய்திகள்
- ஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்
- நீங்கள் பிறந்த கிழமையின் படி செய்ய வேண்டிய பரிகாரங்கள் …..
- நல்ல ஆரோக்கியத்திற்கான வாஸ்து டிப்ஸ்
- வீட்டில் உள்ள தீய சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள்
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com