(Today horoscope 28-05-2018 )
இன்று!
விளம்பி வருடம், வைகாசி மாதம் 14ம் தேதி, ரம்ஜான் 12ம் தேதி, 28.5.18 திங்கட்கிழமை, வளர் பிறை, சதுர்த்தசி திதி இரவு 7:33 வரை; அதன் பின் பவுர்ணமி திதி, விசாகம் நட்சத்திரம் இரவு 12:13 வரை; அதன் பின் அனுஷம் நட்சத்திரம், மரண, சித்தயோகம்
* நல்ல நேரம் : காலை 6:00 – 7:30 மணி
* ராகு காலம் : காலை 7:30 – 9:00 மணி
* எமகண்டம் : காலை 10:30 – 12:00 மணி
* குளிகை : மதியம் 1:30 – 3:00 மணி
* சூலம் : கிழக்கு
* பரிகாரம் : தயிர்
* சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
* பொது : வைகாசி விசாகம், முருகன் வழிபாடு, அக்னி நட்சத்திரம் முடிவு இரவு 2:11 மணி, இரவு 7:34 முதல் கிரிவலம் ஆரம்பம்
மேஷ ராசி நேயர்களே !
நேர்மை எண்ணத்துடன் செயல்படுவீர்கள். புதிய சாதனை நிகழ்த்த வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் கணவரின் அன்பை பெறுவர்.
ரிஷப ராசி நேயர்களே !
உறவினரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். சேமிக்கும் விதத்தில் லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உடல்நிலை சீராக இருக்கும்.
மிதுனம் ராசி நேயர்களே !
சுயநலம் கருதாமல் செயல்படுவீர்கள். கடந்த கால உழைப்புக்கு நற்பலன் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் திருப்தியளிக்கும். சேமிப்பு உயரும். பிள்ளைகளின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே !
இனிய பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். உறவினர், நண்பர் பாசத்துடன் நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பீர்கள்.
சிம்ம ராசி நேயர்களே !
நேர்மை மிக்கவராக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபவிஷயம் குறித்த பேச்சு நடக்கும். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர்.
கன்னி ராசி நேயர்களே !
உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில், வியாபாரத்தில் ஆதாயம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படுவர். பெண்களுக்கு பிள்ளைகளின் வழியில் திடீர் செலவு உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவை.
துலாம் ராசி நேயர்களே !
பொறுப்பு அதிகரிப்பால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் எதிர்ப்பைச் சந்திப்பர். பெண்கள் ஆன்மிக நாட்டமுடன் செயல்படுவர். பிள்ளைகள் கல்வி வளர்ச்சி காண்பர்.
விருச்சிகம் ராசி நேயர்களே !
முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இடையூறு குறுக்கிடலாம். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடலாம். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை தேவை.
தனுசு ராசி நேயர்களே !
பேச்சில் நிதானம் பின்பற்றவும். தொழில், வியாபாரத்தில் மறைமுகப்போட்டி குறுக்கிடும். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் திணறுவர். பெண்கள் பிள்ளைகளால் சிரமத்திற்கு ஆளாவர்.
மகர ராசி நேயர்களே !
மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பணியிலக்கை விரைந்து முடிப்பர். விருந்து, விழாவில் பங்கேற்பீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டாகும்.
கும்பம் ராசி நேயர்களே !
உங்களின் நற்செயலை சிலர் குறை சொல்வர். தொழில் வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்தித்தாலும் ஆதாயம் கிடைக்கும். பெண்கள் குடும்பநலனில் அக்கறை கொள்வர். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.
மீனம் ராசி நேயர்களே !
உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு கொள்வர். உடல்நலனுக்காக சிகிச்சை செய்ய நேரிடும். பெண்களுக்கு செலவில் சிக்கனம் தேவை.
மேலும் பல சோதிட தகவல்கள்
- சனி பகவானை வீட்டில் வைத்து வழிபடலாமா ??
- ஒரே ராசியில் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்
- வளர்பிறை மற்றும் தேய்பிறை உண்டாவதற்கான காரணம்; புராணக்கதை
- பூஜைகளின் போது கற்பூரம் ஏற்றப்படுவதற்கான காரணம் என்ன…?
- வீட்டு வாசலில் எதற்காக மாவிலை தோரணம் கட்டப்படுகின்றது
- இராகு கால துர்கா பூஜையை வீட்டில் எப்படி செய்வது ??
- காரியத் தடைகள் நீக்கும் கடவுள் வழிபாடு……
- செவ்வாய் தோஷ பரிகாரங்கள் …..
- உள்ளங்கையில் காதல் ரேகைகள் ஒரே அளவில் இப்படி இருக்குதா ? அப்படியானால் முதலில்…… இதைப் படியுங்கள்
- வருமானத்தை அள்ளித்தரும் செவ்வாய்கிழமை
எமது ஏனைய தளங்கள்
- Sothidam.com
- Tamilhealth.com
- Tamilworldnews.com
- Tamilsportsnews.com
- cinemaulagam.com
- Tamilgossip.com
- Tamilnews.com