இன்றைய ராசி பலன் 02-05-2018

0
796
Today horoscope 02-05-2018

 

இன்று!

விளம்பி வருடம், சித்திரை மாதம் 19ம் தேதி, ஷாபான் 15ம் தேதி,
2.5.18 புதன்கிழமை, தேய்பிறை, துவிதியை திதி காலை 8:13 வரை;
அதன் பின் திரிதியை திதி, அனுஷம் நட்சத்திரம் மாலை 6:07 வரை;
அதன்பின் கேட்டை நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : மதியம் 12:00–1:30 மணி
* எமகண்டம் : காலை 7:30–9:00 மணி
* குளிகை : காலை 10:30–12:00 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : அசுவினி,பரணி
பொது : முகூர்த்த நாள், முருகன் வழிபாடு.

 

மேஷ ராசி நேயர்களே !
யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். தொழில் வியாபார நடைமுறை மந்தகதியில் இயங்கும். லாபம் சுமார். பெண்களுக்கு வீட்டுச் செலவில் சிக்கனம் தேவை. வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். உடல்நலனில் அக்கறை தேவை.

ரிஷப ராசி நேயர்களே !
முக்கிய பணி நிறைவேற தாமதம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் தடை குறுக்கிடலாம். சுமாரான ஆதாயம் கிடைக்கும். பணியாளர் பாதுகாப்பு விதிகளை கவனமுடன் பின்பற்றவும். பெண்கள் வீட்டுச் செலவை சமாளிக்க திணறுவர்

மிதுனம் ராசி நேயர்களே !
மற்றவர் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். வருமானம் உயரும். குழந்தைகள் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வழியில் இருந்த பிரச்னை தீரும். பெண்களுக்கு தாய் வீட்டாரின் உதவி கிடைக்கும்.

கடக ராசி நேயர்களே !
யாருக்கும் சங்கடம் தராமல் பேசுவது நல்லது. தொழில் சார்ந்த இடையூறுகளை சந்திக்க நேரிடலாம். லாபம் சுமார். பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாகலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். வாகன பயணத்தில் கவனம் தேவை

சிம்ம ராசி நேயர்களே !
சமூக அந்தஸ்த்து உயரும். தொழில் வியாபாரத்தில் வருமானம் உயரும். நிலுவைப் பணம் வசூலாகும். பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர். இயன்ற அளவில் உறவினருக்கு உதவுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கன்னி ராசி நேயர்களே !
நினைத்த செயல் எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

துலாம் ராசி நேயர்களே !
தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் சராசரியாக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் உருவாகும். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவர். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் ராசி நேயர்களே !
அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவை. மிதமான லாபம் கிடைக்கும். பெண்கள் நகை, பணம் கவனமுடன் கையாளவும். உறவினர் உதவி செய்ய முன்வருவர்.

தனுசு ராசி நேயர்களே !
எதிர்காலம் குறித்த நம்பிக்கை மேலோங்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் மூலதனம் செய்வீர்கள். லாபம் உயரும். உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். பணியாளர்களுக்கு சலுகை பயன் எளிதில் கிடைக்கும்

மகர ராசி நேயர்களே !
பலரும் பாராட்டும் வகையில் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க புதிய வாய்ப்பு கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காணாமல் தேடிய பொருள் கைவந்து சேரும். உறவினரின் தேவையறிந்து உதவுவீர்கள்.

கும்பம் ராசி நேயர்களே !
கிடப்பில் இருந்த திட்டம் நிறைவேறும். தொழில் வள்ர்ச்சிக்காக கடினமாக உழைப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் இல்ல சுப நிகழ்வில் பங்கேற்பீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்.

மீனம் ராசி நேயர்களே !
அறிமுகம் இல்லாதவரிடம் கவனமுடன் பேசவும். தொழில் வியாபாரத்தில் இருக்கிற அனுகூலம் பாதுகாப்பது நல்லது. லாபம் சுமாராக இருக்கும். வாகனப் போக்குவரத்தில் மித வேகம் பின்பற்றவும். பெண்கள் நகை, பண விஷயத்தில் விழிப்புடன் இருக்கவும்.

மேலும் பல சோதிட தகவல்கள்   

எமது ஏனைய தளங்கள்

Keyword:Today horoscope 02-05-2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here