{ Thun Mahathir meets Mamannar }
அமைச்சர்களின் பெயர் பட்டியலை வழங்க மாமன்னரை சந்திக்கின்றார் துன் மகாதீர்..!
மலேசிய அமைச்சரவை பெயர் பட்டியலை வழங்குவதற்காக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இன்று மாலையில் மாமன்னரை சந்திக்கின்றார்.
இந்த சந்திப்பு இன்று மாலை மணி 5.00 அளவில் நடைபெறும் என பிரதமர்துறை தெரிவித்துள்ளது.
துன் மகாதீர் அமைச்சரவை பட்டியலை மாமன்னரிடம் வழங்குவார் என அத்துறை கூறியுள்ளது.
துன் மகாதீர் கடந்த 10ஆம் திகதி பிரதமராக மாமன்னர் முன்னிலையில் பதவி ஏற்றுள்ளார்.
தொடக்கத்தில் அவர் பெர்சாத்து கட்டியின் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் உள்துறை அமைச்சர், ஜ.செ.க. பொதுச்செயலாளர் லிம் குவான் எங் நிதியமைச்சர், அமானா தலைவர் முகமட் சாபு தற்காப்புத்துறை அமைச்சர் எனவும் துன் மகாதீர் அறிவித்துள்ளார்.
நேற்று தாம் கல்வியமைச்சராகவும் பி.கே.ஆர். தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிஸா மகளிர் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்கவுள்ளதாக அவர் கூறியிருந்தார்.
மாமன்னரிடம் அமைச்சரவை பட்டியலை வழங்கிய பின்னர் மே 21ஆம் திகதி அமைச்சர்கள் பதவியேற்கும் சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags: Thun Mahathir meets Mamannar
<< RELATED MALAYSIA NEWS>>
*தேர்தலன்று நஜீப் என்னை 2 முறை அழைத்துப் பேசினார்! -அன்வார்
*காருடன் பேருந்து மோதியதில் நால்வர் பலி!
*நஜீப் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 72 பெட்டிகளில் நகைகள்..!
* MACC தலைவராக டத்தோஸ்ரீ சுக்ரி நியமனம்
*ஜூன் 1 முதல் SST நடைமுறைக்கு வருகின்றது..!
*இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே பிரிம் தொகை..!
*கல்வி அமைச்சராக துன் மகாதீர் பொறுப்பேற்கவுள்ளார்..!
*நஜீப் வீட்டில் சோதனையா? எனக்கு தகவல் வழங்கப்படவில்லை! துன் மகாதீர்
*அமைச்சர்களை உடனே நியமிக்குமாறு அம்னோ கோரிக்கை..
*மகாதீர் உடல்நலம் குறித்து துணைவியார் கவலை..!
*நஜீப் வீட்டிலிருந்து கைப்பை, துணிமணிகள் மீட்பு..!
*மாலை அணிவித்து நீண்ட நாட்களுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இணைந்த அன்வர்..!