(thanjai big temple Thunderstorm effected)
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தஞ்சை பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால், கோபுரத்தின் உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், சுதைச் சிற்பமான வலதுபுற கீர்த்தி முகத்தில் சிறுபகுதி சேதமடைந்தது. அந்த கோபுரத்தில் இடி தாங்கி இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மேலும் , சேதமடைந்த பாகங்கள் கோபுரத்தின் உச்சியிலேயே சிதறின. இதில், சில கற்கள் கீழே விழுந்தன, அப்போது, இக்கோபுரத்தின் அருகில் உள்ள காலணி வைப்பகத்தில் குளிர்சாதனப் பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டதுடன், மின் தடையும் ஏற்பட்டது.
இதே போல் கடந்த 2010 ம் ஆண்டு ராஜராஜன் நுழைவு வாயிலில் இடி தாக்கி கலசம் சேதமடைந்தது. பெரிய கோயிலில் இடி விழுந்த சம்பவம் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுமட்டுமல்லாமல் 2011ம் ஆண்டு பெருவுடையார் சன்னதியில் இடி தாக்கி விரிசல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
tags;-thanjai big temple Thunderstorm effected
More Tamil News
- காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!
- கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!
- ‘நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!
- மரத்தினாலான சைக்கிளை உருவாக்கிய கோவை இளைஞர் – தமிழன்டா!
- சிறுமிக்கு பாலியல் தொல்லை – ரயில்வே அதிகாரி கைது!
Tamil News Group websites :