தென்னாபிரிக்கா – இலங்கை போட்டியின் போது 10 பேர் கைது : இருவர் வைத்தியசாலையில்

0
735
Tense situation erupts during Dambulla match

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் தம்புள்ளை சர்வதேச விளையாட்டுத்திடலில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 10 பேர் தம்புள்ளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.(Tense situation erupts during Dambulla match,Tamilnews)

சம்பவத்தில் கிரிக்கட் வீரர்களின் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்த நபரொருவர் மற்றும் மேலுமொரு நபர் காயமடைந்த நிலையில் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மோதல் நிலை ஏற்படுவதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் தென்னாபிரிக்கா அணி 4 விக்கட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Tense situation erupts during Dambulla match,Tense situation erupts during Dambulla match,Tense situation erupts during Dambulla match