(tamilnews natural disaster island wide dams flows)
லக்ஷபான நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் மழை பெய்து வருவதனால் தொடர்ந்து நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது.
அதேவேளை, மில்லகந்த பகுதியில் களு கங்கை, ஜின் கங்கை மற்றும் அத்தனகல ஓயா ஆகியவற்றின் நீர் மட்டங்கள் அதிகரித்து வருகின்றது.
இதனால் தாழ்நிலப் பகுதியிலுள்ளோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவுவதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனால், களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, குருநாகல், பதுளை போன்ற மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் கூட்ட கட்டமைப்பு காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் உடனடி கொந்தளிப்பு இடம்பெறும்.
புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும். இந்தப் பிரதேச கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென்று திணைக்களம் கேட்டுள்ளது.
(tamilnews natural disaster island wide dams flows)
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்