TamilNadu government reportedly submitted Union Home Ministry shooting
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்ட்த்தில் இடம்பெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது பொலிஸார்; நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தூத்துக்குடி கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை தமிழக அரசு உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இந்த அறிக்கையை அனுப்பியிருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது ஏன்? போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அவசியம் என்ன? இத்தனை பெரிய கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தமிழக உளவுத்துறை முன்கூட்டியே அறியாமல் இருந்தது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை அளிக்கும் வகையில் அந்த அறிக்கை விரிவானதாக இருக்கவேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதற்கு தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
TamilNadu government reportedly submitted Union Home Ministry shooting
More Tamil News
- பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
- குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!
- திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
Tamil News Group websites :