(tamil news death sentences seven tamil prisoners soon)
பாரிய குற்றங்கள் தொடர்பாக மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய ஆவணம் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவற்றில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் மரண தண்டனை விதிப்பதற்காக, 18 பேரின் பெயர்கள் அடங்கிய ஆவணம் இதன்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதில், ஏழு தமிழர்களின் பெயர்களும் உள்ளடங்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007 ஆம் தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012 ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ். புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன், 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள டபிள்யு.விநாயக மூர்த்தி மற்றும் எஸ்.ஏ.சுரேஸ் குமார் ஆகிய தமிழ் கைதிகளின் பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளது.
(tamil news death sentences seven tamil prisoners soon)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்



