(Buddhist Bikku arrested allegedly sexually abusing 14 year boy)
பதின்ம வயது சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிக்குவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கம்பஹா நாகஸ் எல்ல ஸ்ரீ விவேகாராம தலைமை பிக்கு 63 வயதான அபரெக்கே சஞ்ஞானந்த தேரரே சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
இதன்படி சந்தேகநபரான பிக்குவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீரிகம பிரதேசத்தில் வைத்து சிறுவனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாடுக்கு அமைய பௌத்த பிக்கு கைது செய்யப்பட்டார்.
அபரெக்கே சஞ்ஞானந்த தேரர் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுவன் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Buddhist Bikku arrested allegedly sexually abusing 14 year boy)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு அனுமதி
- விகாரையின் உருவம் பதிக்கப்பட்ட ஆடையினால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
- அச்சுவேலியில் கம்பிகள், பொல்லுகளுடன் தொடரும் இளைஞர்களின் அட்டகாசம்
- சட்டவிரோத மதுபான வியாபாரிகளை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை
- மஸ்கெலியா வைத்தியசாலை நோயாளர்கள் பசி, பட்டினியுடன் வீடு திரும்பும் அவலநிலை
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- 04 வயது சிறுமி இருமியதால் ஆத்திரமடைந்த வைத்தியர்; தாய் மீது தாக்குதல்
- ஐந்து வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம்; 48 வயதுடையவரின் வெறிச்செயல்