சாவகச்சேரியில் கைதான இளைஞர்கள் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சுமத்தியுள்ள பொலிஸார், அவர்களுக்கும் பொலிஸார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.(sword attack gang police link,Tamilnews)
தென்மராட்சியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் 7 பேர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்கள். சிவில் உடையில் சென்ற மானிப்பாய் பொலிஸார் இவர்களைக் கைது செய்திருந்தார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேருக்கு எதிராக வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தம்மால் பிரதானமாக தேடப்பட்டு வந்த இருவரும் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை விட மேலும் 9பேரைத் தேடி வருவதாகவும், அவர்கள் தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், வெளிநாட்டிலிருந்து பணப்பரிமாற்றல் சேவையூடாக ஒருவருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகக் கடமையாற்றும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கும், கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களின் அலைபேசிகளை மையப்படுத்தியே இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாகப் பொலிஸார் குறிப்பிட்டார்கள்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:sword attack gang police link,sword attack gang police link,