இலங்கையர்களை மியன்மாருக்கு கடத்திய சந்தேக நபர்கள் கைது..!

0
312

இலங்கையர்களை மியன்மாருக்கு கடத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வத்தளை மற்றும் திருகோணமலையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மியான்மரில் பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்ட 56 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு, அந்நாட்டின் சைபர் கிரைம் பகுதியான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் இணைய அடிமைகளாக பணியமர்த்தப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக, மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் கடத்தல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகளுக்கு =

https://tamilnews.com/2023/12/20/sri-lankans-trapped-by-myanmar-terrorist-group-8000-dollars-each-and-torture/