தளபாட தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

0
391
sudden fire broken private furniture manufacturing factory Kalutara

(sudden fire broken private furniture manufacturing factory Kalutara)

களுத்துறை வடக்கு மனான, பெல்பொல பிரதேசத்தில் உள்ள தனியார் தளபாட தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரண, களுத்துறை, பண்டாரக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தில் வசிப்பவர்களின் கூட்டு முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது, தொழிற்சாலையைச் சேர்ந்த ஒரு பணியாளர் கவலைக்கிடமாக நிலையில் இருப்பதாகவும், மேலும் 5 பணியாளர்கள் ஹொரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திடீர் தீப்பரவலின் போது ஏற்பட்ட புகையால் அவர்கள் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் எதுவும் இதுவரை அறியப்படவில்லை.

அத்துடன், தொழிற்சாலையில் அழிவடைந்த பொருட்களின் சேத விபரங்களை வெளியிட முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

(sudden fire broken private furniture manufacturing factory Kalutara)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites