படுகுழியாக மாறுவதற்கு முன்பு மோதல்களை நிறுத்துங்கள்; பாப்பரசர் விடுத்த வேண்டுகோள்

0
71

சீர்படுத்த முடியாத படுகுழியாக மாறுவதற்கு முன்பு” மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள மோதல்களை நிறுத்துமாறு பாப்பரசர் 14 ஆம் லியோ சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். புனித பேதுரு சதுக்கத்தில் இன்று (22) நடைபெற்ற ஞாயிறு ஆராதனையின் போது அவர் இதனை கூறினார்.

பாப்பரசர் 14 ஆம் லியோ மேலும் கூறுகையில், ​​ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க படைகளால் இரவோடு இரவாக தாக்கப்பட்டன. அது அந்நாட்டின் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் இணைந்தது.

இன்று எப்போதும் இல்லாத அளவுக்கு, மனிதகுலம் அமைதிக்காக கூக்குரலிடுகிறது மன்றாடுகிறது. எனவே அமைதியே ஒரே வலி என அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டு வர இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் பாப்பரசர் 14 ஆம் லியோ வலியுறுத்தியுள்ளார்.