ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து ஈரானை “பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புமாறு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் ஈரானின் அணுசக்தி திட்டம் “சர்வதேச பாதுகாப்புக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல்” எனவும் விவரித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதோடு அந்த அச்சுறுத்தலைத் தணிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.