போர் போன்ற மோதல் காரணமாக 2025 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
பால்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா 1996ஆம் ஆண்டு மறைந்தாலும் அவரது கணிப்புகள் குறித்த தகவல்கள் உலகளவில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
அவர் 2025ஆம் ஆண்டில் போர் போன்ற மோதல் காரணமாக மக்கள் தொகை கணிசமாகக் குறையும் என்று கணித்துள்ளார். அதன் பின் 2028ஆம் ஆண்டில் மனிதர்கள் புதிய வளங்களைத் தேடி வெள்ளி கிரகத்தை அடைவார்கள் என்கிறார்.
அதனைத் தொடர்ந்து 2033ஆம் ஆண்டில் பாரிய அளவில் பனிக்கட்டிகள் உருகும் என்றும் இதனால் கடல் மட்டம் அதிகரித்து பாரிய அலைகள் தாக்கி பெரும் உயிர்சேதம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நூறு ஆண்டுகளுக்கு பின் அதாவது 2130யில் வேற்று கிரகவாசிகளுடனான மனித தொடர்பையும் பாபா வங்கா கணிக்கிறார்.
அத்துடன் 2170யில் பருவநிலை மாற்றம் பூமியில் அழிவை ஏற்படுத்தும் என்றும் பூமியில் வறட்சி அதிகரித்து மனித வாழ்க்கையை மோசமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கெல்லாம் மேலாக செவ்வாய் கிரத்திற்கும் நமது பூமிக்கும் இடையே 3005யில் போர் ஏற்படும் எனவும் 3797ஆம் ஆண்டில் பூமியில் இருந்து உயிர்கள் பிரியும் என்றும் இறுதியாக 5079யில் உலகமே அழிந்து மனித இனமும் முற்றிலும் அழிந்துவிடும் என்றும் கணித்துள்ளார்.