குழு ஒன்று, விலை மதிப்புள்ள கார்களை திருடி, அதை பகுதி பகுதியாக பிரித்து, தனித்தனியே விற்பனை செய்துவந்துள்ளனர். இந்த குழுவில் 18 தொடக்கம் 40 வயது வரையான நபர்கள் அடங்குகின்றனர். stealing cars group arrested
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து, இதுவரை Val-d’Oise மற்றும் Yvelines ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து 51 கார்களை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் முதல் நாள் மாலை காரை திருடி, மறுநாள் அதை துண்டு துண்டாக பிரித்துவிட்டு, அனைத்தையும் கழுவி துடைத்து புதிது போல் மாற்றிவிட்டு இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்து வந்துள்ளனர்.
காரின் எஞ்சின் பகுதி, இருக்கைகள் மற்றும் பிற பகுதிகள் என தனித்தனியே விற்பனை செய்துள்ளனர். அதேவேளை வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களையும் திருடி அதை விற்பனை செய்துள்ளார்கள். மொத்தமாக 80,000 யூரோக்களுக்கு உதிரிப்பாகங்களை விற்பனை செய்துள்ளனர்.
இதில் ஈடுபட்டு வந்த 6 பேரினை காவல்துறையினர் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் நேற்று(மே 1) அவர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டனர்.
**Most Related Tamil News**
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- கொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை!