புலம் பெயர் தமிழர்களின் தேவையை கருத்தில் கொண்மே பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது என தேசப்பற்றுளள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. srilanka human rights council deepika udagama vasantha bandara
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அதன் செயலாளர் வசந்த பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கவேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம குறித்த ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
குறித்த சட்டமூலத்தின் மூலம் மனித உரிமைகள் கடந்த காலத்தில் மீறப்பட்டுள்ளன.
எனவே, மனித உரிமைகளுக்கு சாதகமான முறையில் தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை கொண்டு வரவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா உடகமவின் கருத்துக்களை பரிசீலனை செய்யும் பட்சத்தில் அவர் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் பேச்சாளராக செயற்படுகின்றரா அல்லது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டம் முழுமையாக நீக்கப்பட்டால் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பலர் விடுவிக்கப்படுவார்கள்.
இது பாரதூரமானது எனவும், பயங்கரவாத சட்டம் சர்வதேசத்திற்கு பொருத்தமற்றது என்றால் அதில் உள்ள சில சரத்துக்களை மறு சீரமைக்க வேண்டும்.
அதுவே பொருத்தமானதாக இருக்கும் எனவும் வசந்த பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.
srilanka human rights council deepika udagama vasantha bandara
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com