இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நேற்றுக்காலை யாழ்ப்பாணம் கோட்டைக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். Sri Lanka Army Commander Mahesh Senanayake Visited Jaffna Fort Tamil News
அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் கருத்து தெரிவித்தார்.
லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களின் பிரகாரம், கோட்டைகள் இராணுவத்துக்கே உரித்தானவை என்றும், யாழ்ப்பாணக் கோட்டையை விட்டு சிறிலங்கா இராணுவம் வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் முழுமையாக கைப்பற்றப் போகிறது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை.
யாழ். கோட்டையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அங்கே இருக்கிறார்கள்.
கோட்டைக்குள் இராணுவம் இருப்பது தான் வழக்கம். ஆனால், பொதுமக்கள் எந்த நேரத்திலும் கோட்டைக்குள் வரலாம். அதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- பொகவந்தலாவையில் தோட்ட உத்தியோகஸ்தர்கள் ஆர்ப்பாட்டம்
- வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்