முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரடியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. முன்விளையாட்டுகள் பெண்களின் உணர்ச்சியை தூண்டுவதோடு, செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்யும். Sex health tips Tamil News
பெண்களுக்கு செக்ஸின் போது உச்சத்தை எட்டும்போது அவர்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும்.
அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்களை வெறுப்படைச்செய்யும். அதனால் செக்ஸில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம்.
செக்ஸில் ஈடுபடும் போது, முன்னாள் காதலியுடன் செக்ஸ் உறவு பற்றி பேசினால், பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. உண்மையாக இருக்கிறேன் என பலர் இந்த சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர்.
ஆக்ரோஷமாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் ஒவ்வொரு அசைவும் அவர்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்வது அவசியம்.
செக்ஸ் என்பது இருவழிச்சாலை, இருவரும் தங்களின் துணைக்கு பிடித்தபடி நடக்க வேண்டும். பெண்களை மட்டும் எல்லா விஷயங்களை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது.
பெண்களின் உடலில் முடி இருக்கக்கூடாது என ஆண்கள் நினைப்பது போலவே ஆண்களின் உடலில் முடி இருப்பது பெண்களுக்கு பிடிக்காது. அதனால் சுத்தமாக இருப்பது அவசியம்.