கட்டார் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் இராணுவ நடவடிக்கை எடுப்போம் – சவுதி எச்சரிக்கை

0
959
Saudi Warning Qatar installing anti aircraft missiles military action Tamil News

Saudi Warning Qatar installing anti aircraft missiles military action Tamil News

சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட பல வளைகுடா நாடுகள் கட்டார் உடனான தூதரக மற்றும் வியாபார ரீதியிலான உறவை கடந்தாண்டு துண்டித்தது. இதற்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

கட்டார் நாட்டு அரசு பயங்கரவாதத்திற்கு உதவி செய்வதாக கூறி வளைகுடா நாடுகள் அந்நாட்டுடனான உறவை துண்டித்தன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ரஷ்யாவுடன் கட்டார் அரசு ஆயுதங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரியில், விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வாங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சவுதி மன்னர் சல்மான், பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மாக்ரோனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரான்ஸ் நாட்டின் பிரபல நாளிதழில் வெளியான செய்தியில், கட்டார் நாடு ஏவுகணை வாங்குவதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்க சவுதி அரசு தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்தவும் தயார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரான்ஸ் அதிபர் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆயுத பரிமாற்றத்தை தடுத்து அமைதி நிலவ வழிசெய்யுமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாளிதழில் செய்தி வெளியானது.

ஆனால் இதுவரை இதுகுறித்து பிரான்ஸ் பதில் ஏதும் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saudi Warning Qatar installing anti aircraft missiles military action Tamil News

More Tamil News

Tamil News Group websites :