பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரில் 3-0 என படுதோல்வியடைந்தது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஷீட் கான் ஒட்டுமொத்தமாக 8 விக்கட்டுகளை கைப்பற்றி, பங்களாதேஷ் அணிக்கு ஆட்டம் காண்பித்தார்.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டியில், பங்களாதேஷ் அணியின் முக்கிய துடுப்பாட்ட வீரரான சபீர் ரஹ்மான் அணியில் இணைக்கப்படவில்லை. இதனால் ரசிகர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
தற்போது இதற்கான காரணம் வெளிவந்துள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டியில் சபீர் ரஹ்மான், தங்களுடைய அணி வீரர் மெஹிதி ஹாசனுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமாத்திரமின்றி மெஹிதி ஹாசனுடன் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
குறித்த காட்சியை நேரில் கண்ட அதிகாரியொருவர் குறிப்பிடுகையில்,
“அதுவொரு பெரிய பிரச்சினை அல்ல. இருவரும் தவறாக புரிந்துக்கொண்டு கைகலப்பி்ல் ஈடுபட முற்பட்டனர். இதனை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளாமல், முகாமையாளர் அறிக்கையில் கூட இந்த விடயம் உள்ளடக்கப்படவில்லை” என தெரிவித்தார்.
எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சபீர் ரஹ்மான ரசிகர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டு இருப்பதனால், இந்த விடயத்தினை முகாமையாளர் பெரிதாக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
Sabbir Rahman involved physical altercation news Tamil, Sabbir Rahman involved physical altercation