(ready contest Chief Minister Northern Provincial Council head Mavai)
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் தயாராகவே இருப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பெயரை முன்மொழிந்தால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், கேவிந்தன் கருணாகரம் மற்றும் ஆர்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்கு ரீதியாக ஏற்பட்ட பின்னடைவுகள் குறித்து ஆராயப்பட்டதோடு, சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படுவது தொடர்பிலான சாத்தியக்கூறுகள் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்தத் தேர்தலுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
அந்த தருணத்தில் வடமாகாண சபைக்கு கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்பது தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டிருந்தன.
குறிப்பாக மாவை.சோ.சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவது பொருத்தமானது என கூட்டமைப்பிற்குள்ளும் வெளியிலும் கருத்துக்கள் நிலவி வருகின்ற நிலையில் அவருடைய நிலைப்பாடு எவ்வாறு என்பது தொடர்பில் வினவப்பட்டிருந்தது.
இதன்போது கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா, வடக்கு மாகாண சபைக்கான கடந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை போட்டியிடுமாறு கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இருப்பினும் சிலபல காரணங்களுக்காக அந்த தீர்மானத்தினை நடத்த முடியாது போயிருந்தது.
குறிப்பாக நான் போராட்ட பாதையிலிருந்து அரசியலுக்குள் பிரவேசித்தமையால் அக்காலத்தில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த மகிந்த ராஜபக்ஷ அதனைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டிவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருந்தோம். அதன் காரணத்தால் நாம் வேறொரு தெரிவுக்குச் சென்றிருந்தோம் என்று குறிப்பிட்டார்.
(ready contest Chief Minister Northern Provincial Council head Mavai)
More Tamil News
- வனப் பகுதியில் 12 வயது சிறுமி காதலனுடன் உல்லாசம்; மடக்கிப் பிடித்த பொலிஸார்
- அர்ஜூன் அலோசியஸ் பிரபாகரன் அல்ல
- வவுனியா சிறைச்சாலையில் இடம்பெறும் அவலம்; வெளியாகியுள்ளது புகைப்படங்கள்
- அம்மாவின் ஆசையை நிறைவேற்றச் சென்ற மகன் பரிதாபமாக பலி
- மகனும் தாயும் இணைந்து செய்த செயல்; கருக்கலைப்பு நிலையம் முற்றுகை
- செயற்கை இரசாயனங்களால் பழுக்க வைக்கும் பழங்களுக்குத் தடை
- வடமாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக மாவை
- மதுபானம் கடத்தலில் ஈடுபட்ட பாட்டியும் பேரனும் கைது