Home Sports 34 வருட சாதனையை முறியடித்த ரபேல் நடால்!

34 வருட சாதனையை முறியடித்த ரபேல் நடால்!

0
34 வருட சாதனையை முறியடித்த ரபேல் நடால்!

(Rafael Nadal breaks John McEnroe 34-year record)

ஸ்பெயினின் முதற்தர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் களிமண் ஆடுகளத்தில் தொடர்ந்து 50 செட்களை வென்று புதிய சாதயையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரர் ஜோன் மெக்கென்ரோ 34 வருடங்களுக்கு முன்னர் படைத்திருந்த சாதனையை நடால் முறியடித்துள்ளார்.

தற்போது 49 வயதாகியுள்ள ஜோன் மெக்கென்ரோ 1984ம் ஆண்டு களிமண் ஆடுகளத்தில் மெட்ரிட் ஓபன் சம்பியன் உட்பட தொடர்ச்சியாக 49 செட்களில் வெற்றிபெற்று சாதனை படைத்திருந்தார்.

இந்த சாதனையை நேற்று நடைபெற்ற மெட்ரிட் ஓபன் மூன்றாவது சுற்றில் நடால் முறியடித்துள்ளார். நேற்றைய தினம் ஆர்ஜன்டீன வீரர் டியாகோ ஸ்கோவ்ட்ஸ்மனை 6-3 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

<<Tamil News Group websites>>

Rafael Nadal breaks John McEnroe 34-year record