ஈரான் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த ஆர்ப்பாட்டம்

0
45

ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருக்களில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் பலஸ்தீன கொடிகளை அசைத்தபடி “ஈரான் மீது நடத்தப்படும் போரை நிறுத்தவும்“, “ஈரானை தொடாதே“, “ட்ரம்ப் ஒரு போர் குற்றவாளி“ போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை சுமந்தபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரான் மற்றும் காசா மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் ஆகியவற்றை சுட்டிக்காட்டி இஸ்ரேலுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்புக்காக பொலிஸார் பல இடங்களில் குவிக்கப்பட்டனர்.