களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தமை தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். police inquiring kalutura jail inside prisoner admit hospital death
குறித்த கைதி நேற்றைய தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்க மாலை கொள்ளைச் சம்பவம் ஒன்று தொடர்பில் கடந்த 31ம் திகதி அந்த சந்தேகநபர் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவரை 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் அவர் களுத்துறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து கடந்த 02ம் திகதி அவருக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மில்லனிய, ஹல்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
அந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் செய்துள்ள முறைப்பாட்டுக்கமைய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
police inquiring kalutura jail inside prisoner admit hospital death
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com