Police Assistant Commissioner Changing waiting list
குற்ற வழக்கில் சிக்கியவரிடம் லஞ்சம் கேட்டதாக ஆடியோ வெளியான நிலையில், சென்னை தேனாம்பேட்டை காவல் உதவி ஆணையர் முத்தழகு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் சேதுபதி மன்னர் குடும்ப வாரிசான கார்த்திக் சேதுபதி கடத்தப்பட்டு சொத்து அபகரிக்கப்பட்ட வழக்கில் ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் பிரகாஷ், ராஜா சுந்தர் மற்றும் சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை கைது செய்யாமல் இருக்க காவல் உதவி ஆணையர் முத்தழகு லஞ்சம் கேட்டு பேரம் பேசிய போது பதிவு செய்யப்பட்டது என்று கூறி ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஆடியோ குறித்து முத்தழகுவிடம் விளக்கம் கேட்கப்பட்ட நிலையில், தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
More Tamil News
- சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!
- காளி போல வேடமிட்ட நபரை கொலை செய்த இளைஞர்கள்!
- மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை புறக்கணிப்பு!
- 12 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் – பிரமர் மோடி பெருமிதம்!
- மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!