தமிழில் ”கற்றது தமிழ்”, ”தங்க மீன்கள்”, ”தரமணி” உள்ளிட்ட மனதை உருக்கும் படங்களை இயக்கியவர் ராம். இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் படம் ”பேரன்பு”.Peranbu movie Official Teaser 2 released
இப் படத்தில் மம்முட்டி, அஞ்சலி, ”தங்கமீன்கள்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாதனா உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் பி.எல். தேனப்பன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இப் படத்தின் இரண்டாவது டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
இப் படத்தின் முதல் டீஸர் கடந்த 15 ஆம் திகதி வெளியிடப்பட்டது. மனதை உருக வைக்கும் விதமாக இருந்த அந்த டீஸரை பார்த்து பலர் நெகிழ்ச்சி அடைந்ததுடன் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, தற்போது இப் படத்தின் இரண்டாவது டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் டீஸரில் படத்தின் கதாநாயகனாக மம்முட்டியின் நடிப்பும், அவர் எழுப்பிய கேள்வியும் ரசிகர்களை உணர்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.
Video Source : Saregama Tamil
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* தமிழில் வெளியாகும் ஸ்கைஸ்கிராப்பர் ஹாலிவுட் படம்..!
* ரஜினியுடன் ஜோடி சேரும் சிம்ரன் : இளம் நடிகைகளுக்கு இனி நோ சான்ஸ்..!
* ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப் : திரை விமர்சனம்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* வம்சம் சீரியல் புகழ் ஜோதிகா தூக்கிட்டு தற்கொலை..!
* திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!
* கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் : அனந்த் வைத்தியநாதன் வேண்டுகோள்..!
* யோகிபாபுவின் கன்னத்தை கிள்ளிய சர்கார் விஜய் : இணையத்தில் வைரலான புகைப்படம்..!