கோகுல் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ”ஜூங்கா” படத்தில் இடம்பெற்றுள்ள “பாரிஸ் டூ பாரிஸ்” பாடலின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது.ParrysTo Paris Song Making Video Junga movie
”இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தை அடுத்து கோகுல் இயக்கத்தில் வெளியாகவிருத்தும் படம் ”ஜூங்கா”. இப் படத்தை அருண் பாண்டியன் தயாரித்திருக்கிறார்.
இதில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சாயீஷா, யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன் என பலர் நடித்துள்ளனர்.
மேலும், விஜய் சேதுபதி நடித்த படங்களில் இதுவும் ஒரு வித்தியாசமான கதையாகத் தான் இருக்க முடியும் என்பதை டீசர், ட்ரைலர், மேக்கிங்கில் காட்டிவிட்டனர்.
பாடல் மற்றும் டிரெய்லா் வெளியீட்டு விழா கடந்த மாதம் 13 ஆம் திகதி வெளியானது. இப்பட டிரெய்லருக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்தது. எனவே பட வெளியீட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் இப் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில், படக்குழுவினர் ஜூலை 27 ஆம் திகதி படம் திரைக்குவர உள்ளதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது, ஜூங்கா படத்தின் ஒரு பாட்டான “பாரிஸ் டூ பாரிஸ்” மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகியுள்ளது. இது இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
Video source : Think Music India
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* கொஞ்சமும் கூச்சமில்லாமல் இலியானா செய்த செயல் : திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுப்பு..!
* பாலிவுட் செல்லும் நடிகை அமலாபால்..!
* மீண்டும் திரையில் இணையும் ஜஸ்வர்யா – அபிஷேக் ஜோடி : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
* தொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை..!
* பாலியல் சர்ச்சை கருத்தால் மோதிக்கொண்ட இரு நடிகைகள்..!
* திருமண வயதில் பிள்ளைகள் இருக்க இரண்டாவது திருமணத்திற்கு தயாரான பிரபல பாடகி..!
* ரம்யா வெளியேற்றப்பட்டதில் நியாயம் இல்லை : இது எல்லாம் அந்த தொலைக்காட்சியின் வேலை..!
* பேரன்பு படத்தின் அடுத்த டீசர் வெளியீடு..!