கனடாவின் முடிவை வரவேற்ற பலஸ்தீன்

0
785
Palestinians thank Canada

Palestinians thank Canada

ஜெருசலேத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்ட நிகழ்வில் கனடா கலந்துகொள்ளாமைக்கு பலஸ்தீனிய இராஜதந்திரிகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளனர்.

எனினும் அழைப்பு கிடைக்காமையாலேயே தாம் கலந்து கொள்ளவில்லை என கனடா தெரிவித்துள்ளது.

ஜெருசலேத்திற்கு அமெரிக்க தூதரகத்தை கொண்டு சென்றமையை கனடா வரவேற்கவில்லை.

இந்நிலையில், திங்கட்கிழமை இடம்பெற்ற தூதரக திறப்பு விழா பெரும் சர்ச்சையில் முடிந்தது. இதன்போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 50 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்துக்கு காரணம், ஹமாஸ் பின்னணியில் இருந்து பிரச்சினையை தூண்டி விட்டமையே என இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. இத்தகவலை கனடாவுக்கான இஸ்ரேல் தூதுவர் தெரிவித்துள்ளார்.

குறித்த இயக்கமானது, தனது தீய நோக்கங்களுக்கு, பலஸ்தீனியர்களின் வாழ்வை நாசமாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒட்டாவாவில் உள்ள பலஸ்தீனிய பிரதிநிதிகள், அமெரிக்காவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இஸ்ரேலின் பதில் நடவடிக்கை மிக மோசமானதொன்றென வர்ணித்துள்ளனர்.