உலகக்கிண்ணத்தை இரு முறை வென்றதால் பிரெஞ்சு உதைப்பந்தாட்ட உடையில் இரட்டை நட்சத்திரங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இரட்டை நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட புதிய ஜெர்சி உடை ரசிகர்களுக்காக அடுத்த சில வாரங்களில் பிரான்ஸில் விற்பனைக்கு வரவுள்ளது. Official French Jersey sales Tamil News
தாய்லாந்தில் தயாரிக்கப்படும் இந்த உடையின் தயாரிப்பு விலை €3 யூரோக்கள் மாத்திரமே. ஆனால் இதற்கு விற்பனை விலையாக €140 தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் விலையை இத்தனை மடங்காக நிர்ணயித்த தகவல் வெளியானதில் இருந்து பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது. பிரபல ஆடை தயாரிப்பு நிறுவனமான Nike நிறுவனம் இந்த புதிய ஜெர்சியினை தயாரிக்கின்றது. ஆனால் விலை தொடர்பில் எவ்வித தகவல்களையும் Nike நிறுவனம் வெளியிட மறுத்துள்ளது.
விற்பனை விலையில் 63 வீதமான பணம் விநியோகஸ்தர்களுக்கும், 16 வீதமான பணம் Nike நிறுவனத்துக்கும், FFF (பிரெஞ்சு உதைப்பந்தாட்ட குழு) க்கு 4.5 வீத பணமும், மீதமானவை முகவர்கள் மற்றும் விளம்பரங்களுக்கு செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடையினை தயாரிக்கும் தாய்லாந்து நிறுவனம், மொத்தமாக எட்டு மில்லியன் ஆடைகளை தயாரிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tags :- Official French Jersey sales
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸில் பாலியல் நோய்கள் அதிகரிப்பு- இளைஞர்களே அவதானம்!
- பிரான்ஸ் A13 நெடுஞ்சாலையில், திடீரென தீப்பற்றிய பேருந்தினால் 41 பயணிகள் பாதிப்பு!
- Toronto ATM இல் தொடர்ச்சியாக இடம்பெறும் கொள்ளை!
- ரொறன்ரோ பகுதியில், பெண்களை தாக்கும் நபர்!
- யாஷிகாவின் கட்டில் போர்வைக்குள் இருந்த மஹத்தின் உள்ளாடை! கண்டெடுத்த கார்த்தி.