North York Attack
நோர்த் யோர்க் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ரொரன்ரோ மேயர் கருத்து வெளியிட்டுள்ளார்.
ரொரன்ரோவில் கடந்த வாரம் நபர் ஒருவர் சிற்றூர்தி ஒன்றினால் பாதசாரிகளை மோதியதில் 10 பேர் பலியாகியதுடன் மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த அந்த சம்பவத்தில் பலியானவர்களின் நினைவாக நிரந்தர நினைவகம் ஒன்றினை அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக ரொரன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இதனை அமைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நினைவகம் அமைப்பது குறித்து உள்ளூர் சமூக மன்றங்களுடனும், உள்ளூராட்சி அதிகாரிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related News: