(no damage Biyagama Kaduwela bridge)
புதிய கண்டி வீதியில் கடுவல பியகம நகரத்தின் ஊடாக அமைந்துள்ள கடுவெல பாலம் நிலத்திற்குள் அமிழும் அபாயம் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் கமல் அமரவீர இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்திருந்தாலும் பாரிய அளவிலான சேதங்கள் ஏற்படும் அபாயம் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடுவல பியகம நகரத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள முக்கிய பாலம் அச்சுறுத்தல் நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் இந்த பாலத்தின் ஒரு நிரல் மூடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் நேற்றைய தினம் தெரிவித்தனர்.
அதிகரித்த மழை வெள்ளத்தின் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி புதையுண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக இந்த பாலத்தினூடான வாகனப் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நவகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த பாதையை பயன்படுத்துவோர் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்த நிலையில், கடுவல பியகம பாலம் நிலத்திற்குள் அமிழும் அபாயம் இல்லை என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
More Tamil News
- தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு உயிரிழந்த மக்களுக்கு யாழில் அஞ்சலி
- யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி
- மஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- 11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்
- கள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; no damage Biyagama Kaduwela bridge