“கிளீன் சிறீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி அவதியுற்ற மக்களுக்கான புதிய பஸ் சேவை மட்டக்களப்பு ஏறாவூர் இலங்கை போக்குவரத்துசபை சாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் வேண்டுகோளின் பேரில் இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய பிரதேசமான மாவலையாறு கிராமத்துக்கு செங்கலடி ஊடான இந்த பஸ் சேவையை பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆரம்பித்துவைத்தார்.
ஏறாவூர் இலங்கை போக்குவரத்து சபை சாலையின் முகாமையாளர் எம்.எம் ஷைனி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபை பிராந்திய முகாமையாளர் ஆர்.எம். விஜித தர்மசேன உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர் செங்கலடியில் இருந்து காலை வேளையில் புறப்படும் இந்த பஸ் மாவலையாறு, மாவடிச்சேனை, சிவத்த பாலம் உட்பட பல கிராமங்களின் ஊடாக சுமார் 28 கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.
அதேவேளை சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பஸ் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தநர். இந்த நிலையில் இந்த பஸ் சேவையை ஆரம்பித்ததில் திருப்தியடைவதாக அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.