மீன் வியாபார கடைகளில் இருந்து அகற்றப்படும் மீன் பொருட்களுடன் லொறி ஒன்றை நேற்று (01) கம்பளை அம்புலாவ பகுதியில் உள்ள இளைஞர்கள் மடக்கி பிடித்துள்ளனர். மீன்கடை உரிமையாளர் ஒருவர் அவர் கடையில் வெட்டிய மீன்கழிவுகளை வீதியோர காட்டுப்பகுதியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
அதனை அவதானித்த அப்பிரதேசமக்கள் வாகனத்தினை மடக்கிபிடித்து அவர்கள் வீசிய மீன் கழிவுகளை அள்ளி வாகனத்துக்குள்ளே போட்டடுள்ளனர். பின்னர் பொது மக்கள் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://tamilnews.com/wp-content/uploads/2025/01/image-12.png)
![](https://tamilnews.com/wp-content/uploads/2025/01/image-13.png)
![](https://tamilnews.com/wp-content/uploads/2025/01/image-14.png)