நாடாளுமன்றத்தின் அடுத்த தொடரில் புதிய பிரதி சபாநாயகர் நியமிப்பானது இடம்பெறும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தாவல தெரிவித்தார்.
எட்டாவது நாடாளுமன்றின் முதலாவது அமர்வு நிறைவு பெற்றதன் பின்னர் கோப் குழுக்கள் உள்ளிட்ட 15 குழுக்கள் காலாவதியானதுடன், பிரதி சபாநாயகர் பதவியும் இரத்தானமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடாளுமன்றம் எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் கூடும் போது புதிய பிரதி சபாநாயகர் நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.
தற்போது வெற்றிடமாக நிலவும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு உறுப்பினர் ஒருவரை நியமிக்குமாறு சபை அமர்வு ஆரம்பிக்கும்போது அறிவிக்கப்படும். new deputy speaker next sitting angajan ramanathan Tamil latest news
குறித்த பதவிக்காக அரசாங்கத் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இருவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டால், இரகசிய வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும் .
வெற்றிடமாக நிலவும் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மொனராகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமாரசிறியின் பெயர் பிரேரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேநேரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பிரதி சபாநாயகர் பதவி குறித்து கட்சி இதுவரையில் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார். new deputy speaker next sitting angajan ramanathan Tamil latest news
More Tamil News
- மலையகத்தில் தொடர் மழை; விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
- ஊடகவியலாளர் நடேசனின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு
- ஹெலிகொப்டர் சர்ச்சை; சண்டை பிடிக்கும் மைத்திரி – மஹிந்த
- மோடியின் கையில் மக்களின் குருதி; யாழ்ப்பாணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
- மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு; பொலிஸார் விசாரணை
- ஊடகவியலாளர்கள் தாக்குதல்; சிங்கள பத்திரிகை ஆசிரியருக்கு அழைப்பாணை
- தமிழ் இன அழிப்பின் அடையாளமான யாழ் நூலக எரிப்பு நினைவு தினம்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com