முரளியின் வாழ்க்கை திரைப்படமாகிறது… : விரைவில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!!

0
1140
muttiah muralitharan life history Film

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. muttiah muralitharan life history Film

முரளியின் வாழக்கை படத்தை, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடிகர் சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளதுடன், அதற்கான நடிகர், நடிகைகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த படத்தினையடுத்து, இலங்கை அணியின் முரளிதரனின் வாழ்க்கை படத்தை எடுக்கவுள்ளார். இது தொடர்பில் முத்தையா முரளிதரனுடன், வெங்கட் பிரபு பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முத்தையா முரளிதரன் பல இன்னல்களை கடந்து சாதனைப்படைத்த சுழற்பந்து வீச்சாளர், அவரது பந்துவீச்சில் சந்தேகம் எழுப்பிய ஐசிசி, அவருக்கு பல்வேறு சோதனைகளை கொண்டுவந்தது. எனினும் அத்தனையிலிருந்தும் விடுப்பட்ட முத்தையா முரளிதரன் சர்வதேச கிரிக்கெட்டில் இன்றும் சுழல் ஜாம்பவனாக வலம் வருகின்றார்.

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் வெங்கட் பிரபு ஏற்கனவே சென்னை 600028 படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்து முரளிதரனின் வாழக்கையை படமாக்கவுள்ளார்.

இந்தியாவை பொருத்தவரையில் ஏற்கனவே டோனி மற்றும் சச்சின் ஆகியோரின் வாழ்க்கை படமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

muttiah muralitharan life history Film,muttiah muralitharan life history Film,muttiah muralitharan life history Film