(Modi launch island wide emergency ambulance service Sri Lanka)
இலங்கை ஒரு அயல்நாடாக மாத்திரமன்றி, தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் குடும்ப அங்கத்தவர்களில் மிகவும் சிறப்பான, மற்றும் நம்பகத் தன்மையுள்ள பங்காளராகவும் இருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் கொண்டுள்ளார்.
இலங்கையின் வட மாகாணத்துக்கு அவசர நோயாளர் காவு வாகனச் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் காணொளி தொடர்பாடல் மூலம் உரையாற்றிய போதே, அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
“கடந்த ஆண்டு இலங்கைக்கு நான் விஜயம் செய்த போது, இலங்கை முழுவதும் அவசர நோயாளர் காவுவாகனச் சேவையை விரிவுபடுத்துவதற்கு நான் கொடுத்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றியமையையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான பங்குடமை அபிவிருத்தியில் இந்த நிகழ்வு மற்றுமொரு மாபெரும் சாதனையாக இதனை நான் கருதுகின்றேன்.
கடந்த காலத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும் மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதிலும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகின்றது.
இந்தச் சேவையின் விரிவாக்கத்துடன் உள்ளூர்த் திறன்கள் மற்றும் இலங்கையின் உள்ளுர் வேலைவாய்ப்புகள் என்பன ஊக்குவிப்பை பெறும்.
மேலும் நன்மை தீமை ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு முதலில் துணையாக இந்தியா இருந்ததுடன் அவ்வாறே என்றும் தொடர்ந்தும் இருக்கும்.
இலங்கை மக்கள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சிகளையும் பாராட்டுகின்றேன்” என்றும் இந்திய பிரதமர் குறிப்பிட்டார்.
(Modi launch island wide emergency ambulance service Sri Lanka)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com