நீரில் மூழ்கி காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தரை தேடும் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. missing police men searching public navy Tamil latest news
மாதம்பே, கல்முருவ பிரதேசத்தில் வெளளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் குறித்த உத்தியோகத்தர் காணாமல் போயுள்ளார்.
29 வயதுடைய மாதம்பே பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பொலிஸ் காண்ஸ்டபிளான (88587 ) தசநாயக்க பதிருன்னகலாகே டிலான் சம்பத் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
திருமணமாகாத அவர் கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (25) மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முருவ பிரதேசத்தில் வெளளத்தில் சிக்கியிருந்த குடும்பமொன்றை காப்பாற்ற நீரில் நீந்திச் சென்று கொண்டிருக்கும் போது குறித்த பொலிஸ் காண்ஸ்டபிள் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனார்.
நேற்று காணாமல் போனது முதல் அவரை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் தரைப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர பிரதேசவாசிகளும் குழுக்களாக இணைந்து காணாமல் போயுள்ள பொலிஸ் காண்ஸ்டபிளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
missing police men searching public navy Tamil latest news
More Tamil News
- யாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை
- வைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி
- முள்ளிவாய்க்கால் நினைவுச்சுடர் ஏற்றிய தமிழ் வங்கி ஊழியர்கள் பணிநீக்கம்; பேரினவாதிகளின் சதி
- சுட்டுப் பழகுவதற்கு தமிழர்கள் என்ன கைப்பொம்மையா? யாழ். நல்லூரில் ஆர்ப்பாட்டம்
- தமிழர் தாயகத்தில் கொதித்தெழுந்த மக்கள்; ஹற்றன் நஷனல் வங்கி அதிர்ச்சியில்
- ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு; போக்குவரத்து தடை
- கரடி தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் வைத்தியசாலையில்
- 14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது
- மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது
- இன ரீதியான பழிவாங்கல் இல்லை; ஹற்றன் நஷனல் வங்கி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com