பிரித்தானியாவின் புதிய பிரெக்சிற் திட்டத்தின் முக்கிய விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் நிராகரித்துள்ளார். (Michael Barnier EU spokesperson rejected key issues Britain’s Belgrade)
பிரித்தானியாவின் பிரெக்சிற் அமைச்சர் டொமினிக் ராப்புடன் பிரஸ்சல்ஸில் நேற்று (வியாழக்கிழமை) கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தித்த போதே மைக்கல் பார்னியர் இவ்வாறு திட்டத்தை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த மைக்கல் பார்னியர், ”ஐரோப்பிய ஒன்றியம் சுங்க ஒன்றியத்திற்கு உட்பட்டது. இந்த கோட்பாட்டை மதிக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவரல்லாத ஒருவரை ஒன்றியத்தின் சார்பாக சுங்க கொடுப்பனவுகளை சேகரிக்க அனுமதிக்க மாட்டோம்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்புகளுக்கு உட்படாத ஒரு உறுப்பினர் தமது சுங்க கொள்கை மற்றும் விதிகள் ஆகியவற்றை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் அனுமதிக்காது” என்றும் குறிப்பிட்டார்.
பிரித்தானியாவிற்கு வரும் பொருட்கள் மீதான ஐரோப்பிய ஒன்றிய சுங்க வரிகளை பெறுவதற்கான செயல்முறையை உள்ளடக்கிய திட்டமொன்றை பிரித்தானியா முன்வைத்தது.
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் தடைப்பட்டிருந்த பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை புதுப்பிக்கும் வகையில் பிரித்தானியாவின் இத்திட்டம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
tags :- Michael Barnier EU spokesperson rejected key issues Britain’s Belgrade
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- லண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் பாரிய தீ விபத்து
- இங்கிலாந்தில் முதன்முதலாக தங்கத்தாது கண்டுபிடிப்பு
- இங்கிலாந்தில் குழந்தை மீது ஆசிட் வீசிய தந்தை
- தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்றிய இங்கிலாந்து நீச்சல் வீரர்களை சந்தித்த பிரதமர்
- விக்கிலீக்ஸ் அசாஞ்சேவை கைது செய்ய பிரிட்டன் முடிவு
- சமையல் மூலம் மன உளைச்சலை குறைத்துகொள்ளும் பிரிட்டன் பிரதமர்