மத்தல சர்வதேச விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் 12 இலட்சம் ரூபா எனவும் அதனை பராமரிப்பதற்காக மாதாந்தம் 2500 இலட்ச ரூபா செலவிடவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். (mattala airport cost Rs2500 lakhs monthly)
மத்தல விமான நிலையத்தினால் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் 800 ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முறையான ஆய்வு நடத்தாமல் கட்டுநாயக்கவில் நிர்மாணிக்கப்படவிருந்த இரண்டாவது விமான நிலையத்தை மத்தல பகுதிக்கு கொண்டுபோய் தனது முகத்தையும் நினைவையும் பதித்தமை மாத்திரமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச செய்த செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன் உரிமையை அரசிடம் தக்கவைத்துக் கொண்டு நிர்வாகத்தை வேறு நிறுவனத்திற்கு ஒப்படைக்க வழியுண்டா என ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய விமான அதிகார சபையிடம் எமது விமான அதிகார சபையும் இதுதொடர்பாக கலந்துரையாடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் ஒரு இறுதியான முடிவுக்கு வந்த பின்னர், அமைச்சரவையின் அனுமதியுடன் மக்களுடன் கலந்தாலோசிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மனிதனின் பெயருக்காக பொருளாதார ரீதியாக இலாபமில்லாத இடத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை வீணாக்குவதா என்பது தொடர்பில் மக்கள் முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வடமராட்சியில் மீனவரின் படகை தீ வைத்த விஷமிகள்
- வெளிநாட்டவர்களை குறிவைக்கின்றதா வாள்வெட்டுக்குழு; யாழில் அரங்கேறும் சம்பவங்கள்
- மசாஜ் நிலையத்தில் பெண்கள் செய்த வேலை; ஆண்கள் உட்பட 13 பேர் கைது
- அம்மாவிடம் கூறினால் கொன்றுவிடுவேன்; 13 வயது சிறுமி சித்தப்பாவினால் பாலியல் துஷ்பிரயோகம்
- தாய் மற்றும் கணவனுடன் இணைந்து ஹெரோயின் விற்ற பெண் கைது
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- கிழக்கு மக்களுக்கு ரணிலிடமிருந்து இனிப்பான செய்தி!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; mattala airport cost Rs2500 lakhs monthly