(Manikavasakar Ilanchaliyan service transferred court justice Trincomalee)
திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அரச சட்டவாதிகள் நாகரட்னம் நிஷாந்த், பிரிந்தா ரெஜிந்தன் ஆகியோரும் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன், மேல் நீதிமன்ற வலயக் கணக்காளர் வெல்லவராஜன் ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள், மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர்.
மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து வாழ்த்துப் பாமலை மற்றும் நினைவுச் சின்னம் என்பனவும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நலன்புரிச் சங்கம் சார்பில் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் வழங்கி வைத்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கடமையாற்றிய அவர், நீதிச் சேவை ஆணைக்குழுவின் சேவைப் பிரமாணத்தின் அடிப்படையில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக வரும் 28 ஆம் திகதி இடமாற்றம் பெற்றுச் செல்கிறார்.
(Manikavasakar Ilanchaliyan service transferred court justice Trincomalee)
More Tamil News
- மண்டைதீவில் மக்களின் காணியை விட்டு கடற்படையினர் வெளியேற வேண்டும்
- யாழில் இடம்பெற்ற கோரச் சம்பவம்; தந்தையும் மகனும் பலி
- மஹிந்த தலைமையில் பிற்பகல் முக்கிய சந்திப்பு; சூடுபிடிக்கும் தெற்கு அரசியல்
- 17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்
- 11,000 இலங்கை சிறுவர்கள் விற்பனை; அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலம்
- கள்ளக்காதல் ; வயோதிபர் மீது முறைப்பாடு; கத்தியால் குத்திய மகன்
- மஸ்கெலியாவில் மண்சரிவு; 30 பேர் இடம்பெயர்வு
- இதுவரை 13 பேர் பலி; தென் மாகாண மக்கள் அச்சத்தில்
- ‘பசுவதையை ஒழிப்போம் ; சாவகச்சேரியில் ஆர்ப்பாட்டம்
- சிறுமியை அறையில் பூட்டிவைத்து சித்திரவதை செய்த தாய்