மலைப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வரும் நாயகன், ப்ரித்வி விஜய் அவருடன் படிக்கும் நாயகி மஹியை காதலித்து வருகிறார். மஹியிடம் எப்படியாவது காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். காதலை சொன்னால் அவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலே இருக்கிறார்.Mangai Maanvizhi Ambugal Tamil Movie Review
இந்த நிலையில், ப்ரித்வி ஒரு விபத்தில் சிக்கி தனது பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார். மஹியை காதலித்ததையும் மறந்துவிட, கடைசியில் தனது காதலை மஹியிடம் சொன்னாரா? அவர்களது காதல் என்ன ஆனது? இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ப்ரித்வி விஜய் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார். மஹி அழகான பதுமையாக வந்து செல்கிறார். இருவருக்கிடையேயான காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது.
கல்லூரி காதல் பற்றி பல்வேறு படங்கள் வந்து வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஒரு கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி படத்தை இயக்கியிருக்கிறார் வினோ. புதுமையான காதல் காட்சிகள், காமெடி என சில இடங்களில் தொய்வுடன் ஓரளவுக்கு ரசிக்கும்படியாக கொடுத்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.
தமீம் அன்சாரியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். தினேஷ் லக்ஷ்மணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.
ஆக மொத்தத்தில் “மங்கை மான்விழி அம்புகள்” கூர்மை தான்…!
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* கலைஞரின் உடல் நிலை குறித்து மருத்துவமனையின் முக்கிய அறிவிப்பு..!
* பாலாஜி மீது குப்பையை கொட்டிய ஐஸ்வர்யா : கண்ணீருடன் அமைதியான பாலாஜி..!
* இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!
* நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!
* ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!