முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தரகராகவும், நாடாளுமன்றத்தில் தனியான அணியாக செயற்பட்டு வரும் கூட்டு எதிரணியினருக்கு எதிர்கட்சி தலைவர் பதவியைக் கோர எந்தவித உரிமையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (M.A.Sumanthiran comments joint opponent not right demand opposition post)
இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கையில், கூட்டு எதிரணியினர் என்று தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்றத்தில் இயங்குகின்றவர்கள் சகலரும் 2015 ஆம் ஆண்டின் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாக போட்டியிட்டு தெரிவானவர்களே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக கூட்டு எதிரணியினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தரகராக செயற்பட்டு கொண்டு தனியான அணியாக செயற்பட்டு கொண்டிருந்தாலும் இப்படையில் அவர்கள் சட்ட ரீதியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பானவர்களே என்றும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முன்னணியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்திருக்கும் நிலையில், அதன் உறுப்பினர்களாக இருக்ககூடிய எவரும் எதிர்கட்சி தலைவர் பதவியை கோருவதற்கு உரிமை அற்றவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பளம் வேண்டாம் ; நான் தூக்கிலிடத் தயார்
- வவுனியாவில் மாணவி சடலமாக மீட்பு; தற்கொலையா கொலையா? பொலிஸார் விசாரணை
- புற்றுநோயை ஏற்படுத்தும் பூச்சிநாசினிக்கான தடையை நீக்க நடவடிக்கை
- பெற்றோரை பயமுறுத்துவதற்காக கடிதம் எழுதிவிட்டு மாணவன் தற்கொலை
- கொள்ளுப்பிட்டி – தெஹிவளை கடல்பரப்பில் புதிய கடற்கரைப் பூங்கா
- முஸ்லிம்கள் மக்கள் வாக்களிப்பார்கள், பொது பலசேனாவின் ஆதரவாளர் நானில்லை – கோட்டாபய நம்பிக்கை
- அபாயா அணிந்து முகத்தை மூடுவதால் முஸ்லிம் மாணவிகள் தனிமைப்படுத்தப்படுகின்றனர் – தம்பர அமில தேரர் கவலை
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; M.A.Sumanthiran comments joint opponent not right demand opposition post