கருணாநிதியின் தமிழ் விரோத போக்கு பற்றி பிரபாகரன் எழுதிய கடிதம் வெளியானது!

0
1207

கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது. LTTE Leader Prabhakaran Letter Points Karunanidhi Tamil News

ஒரு சாரார் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தத்தில் கலைஞர் கருணாநிதி பாராமுகமாக இருந்த விடயம் தொடர்பில் தமது விசனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் , கலைஞர் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் விடுதலைப்புலிகள் அவர் தொடர்பில் எவ்வாறான போக்கை கடைப்பிடித்தனர் என்பதை உணர்த்தும் வண்ணம் விடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று சமுக வலைத்தளங்களில் அதிகமாக பரவல் அடைந்து வருகின்றது.

குறித்த கடிதத்தில் புலிகளின் உறுப்பினர்களின் பணத்தை கலைஞர் கருணாநிதி அரசு பறிமுதல் செய்து வருவது தொடர்பில் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த கடிதம் தொடர்பில் உண்மை தன்மையை உறுதி செய்ய முடியவில்லை.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites