மத்தியபிரதேசத்தில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதால், அவர்களை சிறுநீர் குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர் அவர்களின் உறவினர்கள். Lovers Made Drink Urine
மத்தியபிரதேசத்தில் இளம் காதல் ஜோடி ஒன்று பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.
இதனால் கடும் கோபமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள், புதுமணத் தம்பதியினரை கடத்திச்சென்று அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டினர். பின் இருவரையும் சிறுநீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காதல் ஜோடியை மீட்டனர். மேலும் அவர்களை கொடுமைபடுத்திய அவர்களது உறவினர்கள் 6 பேரை கைது செய்தனர்.