lightning strikes death woman holding phone chest area
தொலைபேசியை மார்பு பகுதியில் வைத்திருந்த பெண்ணொருவர் மீது மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் ஒன்று தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அது குறித்து மாவட்ட பொலிஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது,
வேலூர் மாவட்டம் திருவலம் பகுதியைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவரது 27 வயதான மனைவி தனது இரண்டு பிள்ளைகளுடன் தனது குடிசை வீட்டில் இருந்துள்ளார். இதன்போது கடும் மழையடன் கூடிய இடி மின்னலும் ஏற்பட்டுள்ளது.
திடீரென மின்னல் தாக்கியதில் குறித்த பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனையின் போது குறித்த நெஞ்சுப்பகுதி வெந்துபோய் கருகிய நிலையில் இருந்துள்ளது. எனவே தொலைபேசி வைத்திருந்ததால் அதன் மூலம் மின்னல் தாக்கி அவர் இறந்ததாகக் கூறப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
lightning strikes death woman holding phone chest area
More Tamil News
- தேசிய மனித உரிமைகள் ஆணையக்குழு தூத்துக்குடி செல்கிறது!
- ப.சிதம்பரம் இன்று சிபிஐ முன் ஆஜர் – முன்ஜாமீன் கிடைக்குமா?
- ராகுல்காந்தியின் ஆசீர்வாதத்தால்தான் முதல்வர் ஆனேன் – கர்நாடக முதல்வர் குமாரசாமி!
- ரஜினிகாந்த் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – சரத்குமார் பேட்டி!
- ரஜினி வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
- யார் சமூகவிரோதிகள்? – ரஜினியின் கருத்துக்கு கொந்தளித்த சீமான்!
- ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவிற்கு தடையா?
- கச்சநத்தம் படுகொலை ஒவ்வொரு தமிழனுக்குமான அவமானம் – சீமான் வேதனை!
- சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு தடை!
Tamil News Group websites :