Kumaraswamy trust vote Karnataka state legislative assembly
இந்திய கர்நாடக மாநிலத் சட்டப்பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக மாநிலத் தேர்தலில் 68 இடங்கள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, 38 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், ம.ஜ.த தலைவர் குமாரசாமி கடந்த மே 23 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான பரமேஸ்வராவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். ஏற்கனவே முதல்மைச்சராக இருந்தபோது செய்த தவறுகளை சரிசெய்ய விரும்புகிறேன் என்று குமாரசாமி பேசினார்.
கர்நாடகா சட்டசபையில் பாரதீய ஜனதா வெளிநடப்பு செய்தது. குமாரசாமி விவசாயி கடனை தள்ளுபடி செய்யாவிட்டால், பி.எஸ். எடியூரப்பா எதிர்வரும் 28ஆம்திகதி மாநில அளவிலான பொராட்டம் ஒன்றை நடத்த இருப்பதாக கூறினார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
2006ஆம் ஆண்டு மதசார்பற்ற ஜனதா தளம் ஆதரவை பெற்று தவறு செய்துவிட்டேன் என கூறினார். பின்னர் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக 117 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து உள்ளனர்.
Kumaraswamy trust vote Karnataka state legislative assembly
More Tamil News
- பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு!
- குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்!
- திமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு!
- ரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா!
- பெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி!
- திமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!
- ஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்!
Tamil News Group websites :